Author: | Varshini Tripura | ISBN: | 1230001951592 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Varshini Tripura |
ISBN: | 1230001951592 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமலும், கதைக்கும், திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம் அறியாமலும், கதை, கதாபாத்திரத்தின் உளவியல் தளங்களை தொட முடியாமலும், புது முயற்சிகளை எடுக்க தைரியம் இல்லாததாலும், தளங்களை கடந்த தாகம் இல்லாததாலும், தொழிற்நுட்பங்களை கற்கும் ஏக்கம் இல்லாத்ததாலும், கலைஞன் என கர்வம் கொள்ளாமல் கடந்து போக நினைப்பதாலும் உலக அரங்கை நாம் தவற விடுகிறோம்.
ஆஸ்கார் போன்ற உலகின் தலை சிறந்த திரைப்பட விருதுகள் அரங்கில் எப்படியான திரைப்படங்கள் கவனிக்கப்படுகின்றன, போற்றப்படுகின்றன என்பதை குறித்த பகுப்பாய்வாக இந்த புத்தகத்தை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். ஆஸ்கார் குறித்த திரைப்படங்கள், உலக சினிமா குறித்த திரைப்படங்கள் என்று சொல்லிவிட்டு அந்த திரைப்படங்களின் கதைகளை எடுத்து வைத்துக்கொண்டு பாட்டி வடை சுட்டக் கதையாக இழுவைப்போட்டுக்கொண்டிருக்காமல் எப்படியான திரைக்கதை உத்திகளை ஆஸ்கார் போன்ற விருதுகளுக்கு செல்லும் திரைப்படங்கள் பயன்படுத்துகின்றன என்பதை குறித்து பேச வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டு ஏழு படங்களை நான் உதாரணமாக இந்த புத்தகத்தில் எடுத்திருக்கிறேன்.
அவை The Artist, Gladiator, The Lord Of The Rings, 12 Years A Slave, Ida, Secret In Their Eyes மற்றும் The Sea Inside. இதில் Ida (போலந்து), Secret In Their Eyes (அர்ஜென்டினா), The Sea Inside (ஸ்பெயின்) ஆகியவைகள் வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியிட்டு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை ஆஸ்காரில் தட்டி சென்றவை. The Lord Of The Rings, Gladiator, The Artist, 12 Years A Slave ஆகியவை சிறந்த படங்களுக்காகவும், மற்ற பிரிவுகளின் கீழும் விருதுகளை அள்ளியவை.
இந்த ஏழு படங்களையும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதமாக வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்திற்கு அடிப்படையாக இருக்கும் திரைகதையையும், அதன் உளவியலையும் முக்கியமாக பேசியிருக்கிறேன். அதை தவிர VFX, கேமிரா கோணங்கள், எடிட்டிங் தொழிற் நுட்பங்களும், எதற்காக இந்த படங்கள் ஆஸ்காரில் தேர்ந்தெடுக்கபட்டன என்பதற்கான காரணங்களும் விளக்கப்பட்டிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் நமது படங்களும், குறும்படங்களும் போட்டயிட வாய்ப்பாக இருக்கும் ஆஸ்கார் பிரிவுகள் குறித்தும், அதற்கான விதி முறைகள் குறித்தும் விளக்கப்பட்டு உள்ளன.