Author: | Varshini Tripura, Naveena Alexander | ISBN: | 1230001951585 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Varshini Tripura, Naveena Alexander |
ISBN: | 1230001951585 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
இன்றைய நவீன மனிதன் காலை எழுந்தது தொடங்கி இரவு உறங்கச் செல்லும் நொடி வரை வயிற்றுக்கு என்று எடுத்துக்கொள்ளும் உணவுகளில் எப்படியான இரசாயன மற்றும் போலி உணவுப் பொருட்களின் கலப்படங்கள் புல்லுருவிகளால் நிகழ்த்தப்படுகின்றன என்பதை கிரியேட்டிவ் நான்-பிக்சன் எழுத்து வகை வழி இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறோம். தற்போது நியூசிலாந்தில் இருக்கும் எனது சக எழுத்தாள தோழி வர்ஷினி இந்தப் புத்தகத்தின் மற்றொரு பகுதியான மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் பாதகங்களைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.
இது இரண்டு பகுதிகளை கொண்ட புத்தகம். முதல் பகுதியில், நாம் மேலே பார்த்த சில புல்லுருவி பேராசை பேர்வழிகளால் உணவுப் பொருட்களில் எடைக்காகக் கலக்கப்படும் இரசாயனங்கள் மற்றும் போலி உணவுப் பொருட்கள் குறித்தும், இரசாயன பிரிசர்வேட்டிவ்ஸ், பிளேவரிங் அடிட்டிவ்ஸ், கலரிங் ஏஜன்ட்ஸ், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் குறித்தும் பேசியிருக்கிறேன். இரண்டாம் பகுதியில் முன்பே கூறியதைப் போல வர்ஷினி மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் பாதகங்களைக் குறித்து பேசியிருக்கிறார்.
பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எப்படியான இரசாயனங்கள் (உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் அளவில்) கலக்கப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது நுகர்வோரின் அடிப்படை உரிமைகள் சிலவற்றில் ஒன்று. நுகர்வோரின் இந்த உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் அனைத்து நிறுவனங்களாலும், தனி நபர் உற்பத்தியாளர்களாலும் மதிக்கப்படுகிறது. தாங்கள் உற்பத்தி செய்து, பதப்படுத்தி விற்பனை செய்யும் உணவுப் பொருட்களில் எப்படியான இரசாயன மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் பாதுகாப்பான அளவுகளில் கலக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவல்களை அவர்கள் வெளியிடத் தவறுவதில்லை. ஆரோக்கிய வாழ்க்கைக்கு எவ்வளவு அளவுகளில் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களும் கூட வெளியிடப்படுகின்றன.