Author: | Naveena Alexander | ISBN: | 1230001951608 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander |
ISBN: | 1230001951608 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
ஒரு சிறிய பனி துளியும் அதற்கென்று விதிக்கப்படாத இடத்தில் விழுவதில்லை. – கென் டான்
மீண்டும் ஒரு ஜென் புத்தகமா என்கிற ஒருவித சலிப்புடன் இந்த புத்தகத்தை கையில் எடுத்திருந்தால் உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள். இது மீண்டும் ஒரு ஜென் புத்தகம் அல்ல. சிறுகதையும் வரலாறும் கலந்த புனைவு இந்த புத்தகம். வரலாற்று நிகழ்வுகளையோ அல்லது வரலாற்று நாயகர்களையோ கதைக்களமாக, கதை மாந்தர்களாக கொண்ட வரலாற்று புதினமாக இருக்கலாமோ என்கிற முன் அனுமானமும் உங்களின் அவசரத்தையே காட்டுவதாக இருக்கும்.
அப்படியும் இல்லை. நீங்கள் படிக்க போகும் சிறுகதை சமகாலத்தில் நடைபெறக் கூடியது. அதில் வரக் கூடிய கதை மாந்தர்களில் ஒன்று வேண்டுமானால் சுமார் 800 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு மனிதராக இருக்கலாம். மற்றபடி இது எந்த வகையிலும் வரலாற்று பின்புலம் கொண்ட historical fiction சிறுகதை புத்தகம் கிடையாது. இது முழுக்க முழுக்க ஜென் பற்றிய புத்தகம். கோகன் என்று அழைக்கப்படும் ஜென் துண்டு கதைகளை போட்டு பக்கங்கள் நிரப்பப்பட்டு உங்கள் கைகளில் தவழும் புத்தகமும் அல்ல இது. ஜென்னின் ஆதி அந்தம் குலம் கோத்திரம் என்று அனைத்தையும் விளக்கி செல்லும் ஒரு பகுதி வரலாற்று புத்தகம். அப்படியென்றால் மறு பகுதி? படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
போதி தர்மர் குறித்த புனைவுகளுக்கு பின்னால் இருக்கும் வரலாற்று உண்மைகள், உலகம் முழுவதிலும் இன்றைக்கு பரவலாக பேசப்படும் ஜென்-இந்த நிலையை அடைவதற்கான இலக்கிய பணி செய்த அந்த முக்கிய ஜென் குரு, வடக்கு சா-ஆன் பள்ளியின் பிரதானமாக இருக்கும் கோன் கதைகள் என்று பல புதிய வரலாற்று சங்கதிகளை உங்களுக்கு அறிமுகம் செய்யக் கூடிய புத்தம் இது.