Author: | Varshini Tripura | ISBN: | 1230001951875 |
Publisher: | Andhazdhi | Publication: | October 5, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Varshini Tripura |
ISBN: | 1230001951875 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 5, 2017 |
Imprint: | |
Language: | English |
பொதுப்புத்தி என்பது நிச்சயமாக ஒரு பொருளையோ அல்லது சித்தாந்தத்தையோ அல்லது தத்துவத்தையோ குறிப்பது அல்ல. மனித உளவியலைக் குறிக்கிறது. அதிலும் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு இயங்கக் கூடிய மனித உளவியலைக் குறிக்கிறது. இதை முதன் முதலில் உளவியல் துறை சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தி எழுத்திற்குக் கொண்டு வந்தவர் குஸ்டவ் லே பான். லே பான் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர் பல துறைகளில் வித்தகர். அதில் சமூக உளவியலாளர் துறையும் ஒன்று. இவர் 1896-ல் வெளியிட்ட The Crowd: A Study of the Popular Mind (La psychologie des foules) புத்தகமே முதலில் பொதுப்புத்தி என்றால் என்ன என்கிற முறையான விரிவான உளவியல் விளக்கத்தைக் கொடுத்த புத்தகம்.
இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்பாடு பல மனிதச் சமூக உளவியல் புத்தகங்கள் எழுதப்பட்டு வெளிவந்தன. இந்தப் புத்தகம் முன்வைத்த இரண்டு வகையான புத்தியையே அவைகளும் தங்களின் ஆய்வுகளுக்கு அடிப்படையாகக் கொண்டன. மனிதன் தனித்து இருக்கும்போது ஒருவகையிலும் அவனே மற்ற மனிதர்களுடன் சேர்ந்து இயங்கும்போது வேறு வகையிலும் செயல்படுவதை லே பான் இந்தப் புத்தகத்தின் வழி விரிவாக விளக்குகிறார்.
தனித்து இருக்கும் போது எப்படியான புற அழுத்தங்களாலும், கருத்துகளாலும் பாதிக்கப்படாமல் சுயமாகச் சிந்தித்து நல்லது கெட்டது குறித்து முடிவெடுக்கக் கூடிய மனிதன், கூட்டமாக இயங்கும்போது சுயமாகச் சிந்திக்கும் திறனை இழந்து ஆட்டு மந்தைகளைப் போலக் கட்டமைக்கப்பட்ட கருத்துகளுக்கும், பிம்பங்களுக்கும் பின்னால் எத்தகைய கேள்விகளும் இல்லாமல் போவதும், அதன்படி செயல்படுவதும் நடக்கிறது. இதற்குக் காரணம் பொதுப்புத்தி என்கிற உளவியல் என்பதை The Crowd புத்தகத்தில் விரிவுபடுத்திக் காட்டுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தியை அடிப்படையாகக் கொண்டு பல அரசியல், விளம்பரப் பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன. சொல்லப்போனால் இரண்டு உலகப் போர்களையும் மக்களினதாக மாற்றியதும் பொதுப்புத்தி உளவியல் மீது கட்டமைக்கப்பட்ட பிரச்சாரங்களே. இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பான காலக்கட்டம் வரைக்கும் போர் என்பது போர் களத்தோடும், போர் களத்தில் இருக்கும் இராணுவத்தோடும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தது.